நீங்கள் ஒரு பெண் என்றால், பயங்கரமான எரியும் உணர்வையும், எப்போதும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதலையும் அனுபவித்திருக்கலாம். ஆனால் சிறுநீர் கழித்த பின் மேலும் அதிகமாக எரியும் உணர்வை தான் பெற்று இருப்பீர்கள்! இது ஒரு பயங்கரமான கனவாக இருக்கலாம். இது சிறுநீர் பாதை தொற்றாக இருக்கலாம்!
சிறுநீர் பாதை தொற்றுகள் அல்லது யுடிஐ (UTI)க்கள் இன்றைய உலகில் காணப்படும் இரண்டாவது பொதுவான தொற்று வகை ஆகும். இந்தத் தொற்றுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பயன்படுத்தி சிகிச்சையளிப்பது எளிது. ஆனால் தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் மேலும் வலி மிகுந்ததாகவும் சங்கடமாகவும் மாறலாம்.
ஆண்களுக்கும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படலாம் என்றாலும், இது பெண்களில் மிகவும் பொதுவாக காணப்படுகிறது. ஏறக்குறைய 2 பெண்களில் 1 வர் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது சிறுநீர் பாதை தொற்றைச் சந்தித்து இருப்பார்கள். அதே சமயம் 4ல் 1 பெண் மீண்டும் மீண்டும் தொற்றுக்கு உள்ளாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!
இந்த வலைப்பதிவில் சிறுநீர் பாதை தொற்றுகளைப் பற்றி மேலும் அறியலாம். தொடர்ந்து வாசியுங்கள்!
சிறுநீர் பாதை தொற்று என்றால் என்ன? (What is a UTI?)
சிறுநீர் அமைப்பு அல்லது சிறுநீர் பாதை என்பது நமது உடலின் பல செயல்பாடுகளை மேற்கொள்ளும் ஒரு பகுதி ஆகும். மிகவும் முக்கியமாக உடலில் இருந்து சிறுநீரை உற்பத்தி செய்து அகற்றுகிறது. இது இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு சிறுநீர்க்குழாய்கள், ஒரு சிறுநீர்ப்பை மற்றும் ஒரு சிறுநீர் வடிகுழாய் ஆகியவற்றால் ஆனது.
சிறுநீர் பாதை தொற்று என்பது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் சிறுநீர் பாதைக்குள் சென்று விடுவதால் ஏற்படும் ஒரு பொதுவான நிலை - பொதுவாக சிறுநீர் பாதையில் பாக்டீரியா அல்லது பிற நுண்ணுயிரிகளின் தாக்கம் காணப்படாது - இங்கு பாக்டீரியாக்கள் பெருகுவதால் பெண்களுக்கு சிறுநீர் தொற்றை உருவாக்குகிறது.
பெரும்பாலும் நோய் தொற்றானது சிறுநீர் பாதையின் கீழ் பகுதிகளான - சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் வடிகுழாய், போன்றவற்றில் மட்டுமே ஏற்படுகிறது. சில நேரங்களில் சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர் குழாய்களுக்கு பரவலாம். அப்படி பரவும் பட்சத்தில், இது உயிருக்கே ஆபத்தாக மாறலாம்.
சிறுநீர் பாதை தொற்று, பெண்களை அதிகமாக பாதிக்கிறது, ஏன்? / பெண்களுக்கு சிறுநீர் தொற்று வர காரணம் என்ன? (What makes women more prone to UTI?)
பெண்களின் உடலமைப்பே பெண்களுக்கு சிறுநீர் தொற்று வர காரணம் ஆகும். எளிய சொற்களில், பெண்களின் உடல் அமைப்பே அதிகமாக சிறுநீர் பாதை தொற்றுக்களைப் பெறுவதற்கு காரணமாக உள்ளது. ஆண்களுடன் ஒப்பிடுகையில், பெண்கள் சிறிய சிறுநீர் வடிகுழாயைக் கொண்டுள்ளனர் - இது உடலில் இருந்து சிறுநீரை வெளியேற்றும் குழாய் ஆகும். அதாவது, பாக்டீரியா செல்வதற்கு சிறிய தூரமாக உள்ளது என்று பொருள்.
பெண்களுக்கு சிறுநீர் தொற்று வர மற்றொரு காரணம், பெண்களில் சிறுநீர் வடிகுழாய் மற்றும் மலக்குடல் (ஆசனவாய்) இடையே காணப்படும் நெருக்கம். மலக்குடலில் உள்ள பாக்டீரியாக்கள் சிறுநீர் வடிகுழாயை எளிதாக சென்றடைகிறது மற்றும் பெண்களில் அடிக்கடி சிறுநீர் பாதை தொற்றை உருவாக்குகிறது.
பெண்களில் சிறுநீர் பாதை தொற்று இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் / பெண்களில் சிறுநீர் தொற்று அறிகுறிகள் (Symptoms of UTI in women)
பொதுவாக, பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் தொடக்கத்தில் எந்தவிதமான அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. சில சமயங்களில் அவை நோய்த்தொற்றின் காலம் முழுவதும் எந்தவிதமான அறிகுறிகளையும் காட்டாது. எனினும், பெண்கள் கீழ்க்கண்ட சில சிறுநீர் தொற்று அறிகுறிகள் மற்றும் சிறுநீர் பாதை தொற்று அறிகுறிகளை உணரலாம் மற்றும் இது போன்ற நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும்:
- அடிக்கடி மற்றும் அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் எனும் தீவிரமான உந்துதல்,
- சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு,
- கலங்கலான அல்லது துர்நாற்றம் வீசும் சிறுநீர்,
- சிறுநீர் கழித்த பிறகும் சிறுநீர்ப்பை முழுமையாக இருப்பது போன்ற உணர்வு
- சிறுநீரில் இரத்தம்,
- கீழ் முதுகு வலி அல்லது பூப்பெலும்புக்கு மேல் உணரப்படும் வலி
ஒரு சிறுநீர் பாதை தொற்றானது முழுமையாக குணமடைய பொதுவாக 3-17 நாட்கள் ஆகும்! எனவே, உங்கள் சிறுநீர்ப்பை வெடிப்பது போன்ற நிலையில், சரியான நேரத்தில் கழிப்பறைக்குச் செல்ல முடியாமல் இருக்கும் போது ஏற்படும் திடீர் கசிவுகள் மற்றும் நீர் சொட்டுதலை எப்படி சமாளிப்பீர்கள்? இது உண்மையில் எளிமையானது! இந்தியாவில் உறிஞ்சக்கூடிய சுகாதார தயாரிப்புகளின் நம்பர் 1 உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்பட்ட கட்டுப்பாடற்ற கழிவுக்கான பராமரிப்பு தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள் — பிரண்ட்ஸ் பெரியவர்களுக்கான டயப்பர்கள்.
பிரண்ட்ஸ் UltraThinz Slim Fit Dry Pants இந்தியாவின் பெரியவர்களுக்கான முதல் மெல்லிய டயப்பர்கள் ஆகும். குறிப்பாக ஒரு பெண்ணின் உடலமைப்புக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. இது புடவை, குட்டை பாவாடை, ஜீன்ஸ் அல்லது குட்டை பாவாடையின் கீழ் மெல்லியதாகவும் கண்ணுக்கு புலப்படாமலும் இருக்கும். இது மேலும் கீழ்கண்ட அம்சங்களைக் கொண்டுள்ளது:
- அதிசிறந்த மென்மை மற்றும் உறிஞ்சும் தன்மை கொண்டது.
- தொடைகள் வழியாக நீர் சொட்டுதல் மற்றும் கசிவுகளுக்கு எதிரான பாதுகாப்பிற்கு பக்க கசிவு தடுப்புகளைக் கொண்டுள்ளது.
- அதிக உணர்திறன் கொண்ட சருமத்தைப் பாதுகாக்க பாக்டீரியா மற்றும் சொறி எதிர்ப்பு திறன் கொண்டது.
- 100% தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் மற்றும் செயற்கை வாசனை திரவம் அற்றது.
அப்படியென்றால் சிறுநீர் கசிவை ஏற்படுத்தும் சிறுநீர் பாதை தொற்றில் இருந்து மகிழ்ச்சி பொங்கும் சுதந்திரம்!
பல வகையான சிறுநீர் பாதை தொற்றுகளும் உள்ளன. இது மிகவும் குறிப்பிட்ட சிறுநீர் தொற்று அறிகுறிகளை மட்டுமே ஏற்படுத்தக்கூடும் மற்றும் சிறுநீர் பாதை பாதிக்கப்பட்ட பகுதியைப் பொறுத்து, பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சிறுநீர் பாதை தொற்று அறிகுறிகள். அவை:
- சிஸ்டிடிஸ் - சிறுநீர்ப்பை தொற்று
- யுரித்ரிட்டிஸ் - சிறுநீர் வடிகுழாய் தொற்று
- பைலோனெப்ரிடிஸ் - சிறுநீரகங்களின் தொற்று
- வஜினிடிஸ் - பெண்ணுறுப்பு தொற்று
தொற்று சிறுநீரகத்தையும் பாதித்தால், உடனடி மருத்துவ கவனிப்பு அவசியம். மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளுக்கு கூடுதலாக, சிறுநீரக தொற்று உள்ள ஒரு பெண் பின்வருவனவற்றை அனுபவிக்கலாம்:
- காய்ச்சல்
- குளிர்
- வாந்தி
- மேல் முதுகு அல்லது பக்கவாட்டு வலி
பெண்களில் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? (What are the causes of UTI in women?)
நாம் ஏற்கனவே பார்த்தபடி, சிறுநீர் பாதையில் பாக்டீரியா நுழைவதன் விளைவே சிறுநீர் பாதை தொற்று ஆகும். பெண்களில் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுவதற்கான சில பொதுவான காரணங்கள் பின்வருமாறு:
- சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்திருத்தல்,
- மோசமான பெண்ணுறுப்பு சுகாதாரம், குறிப்பாக மாதவிடாய் காலத்தில்,
- நீரிழப்பு,
- மலச்சிக்கல்,
- பாலியல் செயல்பாட்டுக்கு பிந்தைய மோசமான சுகாதாரப் பராமரிப்பு
பெண்களில் சிறுநீர் பாதை தொற்று ஆபத்தை அதிகரிக்கும் கூடுதல் காரணிகள் (Additional factors that increase the risk of UTI in women)
முன்னர் குறிப்பிடப்பட்ட இரண்டு காரணிகளைத் தவிர, கீழ்கண்ட காரணிகள் உங்கள் சிறுநீர் பாதை தொற்றுகள் மற்றும் பெண் சிறுநீர் பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கலாம்:
- கர்ப்பம்
- பெரிமெனோபாஸ் மற்றும் மெனோபாஸ்
- நீரிழிவு நோய்
- சிறுநீரக கற்கள்
- மோசமான நோய் எதிர்ப்பு சக்தி
- வடிகுழாய் பயன்பாடு
- அடிக்கடி பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுதல்
- அடிக்கடி UTIக்கள் ஏற்பட்டுள்ளது என்பதற்கான குடும்ப வரலாறு
பெண்களில் சிறுநீர் பாதை தொற்று நோய் கண்டறிதல் (Diagnosis of UTI in women)
சிறுநீர் பாதை தொற்றுகள் குறிப்பிடத்தக்க அறிகுறிகளை ஏற்படுத்தாது என்பதால், சில நேரங்களில் அவற்றைக் கண்டறிவது சிரமமாக இருக்கலாம். உங்கள் மருத்துவர் உடல் பரிசோதனை செய்து, உங்கள் மருத்துவ வரலாற்றை மதிப்பாய்வு செய்யலாம். அதைத் தொடர்ந்து உங்கள் நிலை பற்றி மேலும் சிறப்பாக புரிந்து கொள்ள உள் பரிசோதனை செய்யலாம்.
சில பொதுவான சோதனைகள்:
- சிறுநீர் பகுப்பாய்வு- தொற்று இருக்கிறதா என்று சோதிக்க சிறுநீர் மாதிரி சேகரிக்கப்படுகிறது.
- சிறுநீர் செல் வளர்ப்பு சோதனை- தொற்றுநோயை ஏற்படுத்தும் குறிப்பிட்ட கிருமிகளைக் கண்டறிவதற்கான சோதனை.
- எம்ஆர்ஐ அல்லது சிடி ஸ்கேன்- உங்கள் சிறுநீர் பாதையின் படங்களைப் பெறுவதற்கான இமேஜிங் சோதனைகள்.
- சிஸ்டோஸ்கோபி- உங்கள் சிறுநீர்ப்பையின் உட்புறத்தைப் பார்க்க ஒரு முனையில் கேமராவுடன் கூடிய மெல்லிய குழாயைப் பயன்படுத்தும் செயல்முறை.
சிறுநீர் பாதை தொற்றைத் தடுத்தல் (Prevention of UTI)
சிறுநீர் பாதை தொற்றுகளின் அபாயத்தைக் குறைக்க:
- போதுமான அளவு தண்ணீர் அருந்துங்கள்.
- சிறப்பான தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணுங்கள்.
- உங்கள் சிறுநீரை அதிக நேரம் அடக்கி வைத்திருக்க வேண்டாம்.
- சிறுநீர் அல்லது மலம் கழித்த பிறகு முன்னிருந்து பின்புறமாக துடைத்து கொள்ளுங்கள்.
- உடலுறவுக்கு முன்னும் பின்னும் சிறுநீர் கழித்திடுங்கள்.
- மலச்சிக்கலைத் தவிர்க்க நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுங்கள்.
- உடற்பயிற்சியின் போது பயன்படுத்திய ஆடைகள் அல்லது வியர்வையுடன் கூடிய ஆடைகளை விரைவாக மாற்றிவிடுங்கள்.
- விந்தணுக்கொல்லிகள், டயாஃபிரம்கள் மற்றும் உயவூட்டப்படாத ஆணுறைகளைத் தவிர்த்து வேறு சில கருத்தடை முறைகளைத் தேர்ந்தெடுங்கள்.
பெண்களில் ஏற்படும் சிறுநீர் பாதை தொற்றுக்கான சிகிச்சை முறைகள் (Treatments for UTI in women)
சிறுநீர் பாதை தொற்றுக்கான தொடக்க சிகிச்சையானது, சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரகங்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க உதவுகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பிகள் சிறுநீர் பாதை தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் முதல் வரிசை மருந்துகள் ஆகும்.
பெரும்பாலான சிறுநீர் பாதை தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பது எளிதானது. ஆனால் பரிந்துரைக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பற்றிய விவரங்கள் மற்றும் எவ்வளவு காலம் என்பது உங்கள் சிறுநீரில் கண்டறியப்பட்ட பாக்டீரியா வகை, சிறுநீர் பாதை தொற்றின் வகை மற்றும் உங்கள் தற்போதைய ஆரோக்கியம் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தது.
பெண்களுக்கான UTI மருந்துகளுக்கு கூடுதலாக, சிறுநீர் தொற்று வீட்டு வைத்தியங்களான வெப்பமூட்டும் பட்டைகள் மற்றும் சூடான குளியல், வாசனை இல்லாத மற்றும் மென்மையான பொருட்களைப் பயன்படுத்துதல் மற்றும் சிறுநீர்ப்பைக்கு எரிச்சலூட்டும் காஃபின், ஆல்கஹால், சிட்ரஸ் பழங்கள், காரமான உணவுகள் மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்கள் போன்றவற்றைத் தவிர்த்தல் போன்றவை பரிந்துரைக்கப்படுகின்றன.
இறுதியாக, சிறுநீர் பாதை தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று ஆகும். இதன் முக்கிய அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதற்கான தீவிரமான தூண்டுதல் போன்றவை அடங்கும். சிகிச்சை முறைகளில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் வெப்பமூட்டும் பட்டைகள் போன்ற வீட்டு வைத்தியம் போன்றவை அடங்கும். தடுத்தல் என்பது சிறந்த சிகிச்சை முறை ஆகும். எனவே, சிறப்பான தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரியுங்கள், போதுமான அளவு தண்ணீர் அருந்துங்கள், முன்னிருந்து பின்புறமாக துடைத்திடுங்கள், மேலும் உங்கள் சிறுநீர் பாதை தொற்றுகளின் அபாயத்தைக் குறைக்க வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள பிற தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுங்கள். மற்றொரு வலைப்பதிவில் சந்திப்போம்!
பெண்களில் ஏற்படும் சிறுநீர் பாதை தொற்று பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQS about Urinary Tract Infection in Women)
1. பெண்களில் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுவதற்கான முக்கிய காரணம் என்ன? / பெண்களுக்கு சிறுநீர் தொற்று வர காரணம் என்ன? (What is the main cause of UTI in females?)
பெண்கள் மற்றும் ஆண்களுக்கு சிறுநீர் பாதை தொற்றுகள் (UTIs) ஏற்படுவதற்கான முக்கிய காரணம் பாக்டீரியா ஆகும். அது பெரும்பாலும் எஸ்செரிச்சியா கோலை (இ. கோலை) பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியாக்கள் பொதுவாக சிறுநீர் வடிகுழாயில் (சிறுநீர்ப்பையில் இருந்து உடலின் வெளிப்புறத்திற்கு சிறுநீரை எடுத்துச் செல்லும் குழாய்) நுழைந்து சிறுநீர் பாதையில் பயணித்து, சிறுநீர்க்குழாய், சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரகங்களில் தொற்றை ஏற்படுத்துகின்றன.
2. பெண்களில் ஏற்படும் சிறுநீர் பாதை தொற்றுக்கான சிறந்த சிகிச்சை என்ன? (What is the best treatment for UTI in females?)
பெண்களில் ஏற்படும் சிறுநீர் பாதை தொற்றுகளுக்கான சிறந்த சிகிச்சையானது ஒரு மருத்துவ நிபுணரால் பரிந்துரைக்கப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மருந்து ஆகும். குறிப்பிட்ட வகை நுண்ணுயிர் எதிர்ப்பி மற்றும் சிகிச்சை காலம் போன்றவை நோய்த்தொற்றின் தீவிரம் மற்றும் இருப்பிடம், அத்துடன் தனிநபரின் மருத்துவ வரலாறு மற்றும் பிற காரணிகளைப் பொறுத்தது.
3. எந்த சிறுநீர் தொற்று வீட்டு வைத்தியம் சிறுநீர் பாதை தொற்றைக் கொல்லும்? (What home remedy kills UTI?)
UTI களுக்கான சிறப்பான சிகிச்சையாக நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் போது, சில சிறுநீர் தொற்று வீட்டு வைத்தியங்களும் அறிகுறிகளை குணப்படுத்த அல்லது தொற்று மேலும் பரவும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. அவை:
- சிறுநீர் பாதையில் உள்ள பாக்டீரியாக்களை வெளியேற்ற அதிக தண்ணீர் குடித்தல்.· வலி மற்றும் அசௌகரியத்தை நீக்க இப்யூபுரூஃபன்அல்லது அசிடமினோபன் போன்ற வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ளுதல்.
- காஃபின், ஆல்கஹால், காரமான உணவுகள் மற்றும் செயற்கை இனிப்பூட்டிகளைத் தவிர்த்தல். ஏனெனில், இவை சிறுநீர்ப்பைக்கு எரிச்சலூட்டும் தன்மை கொண்டவை மற்றும் சிறுநீர் பாதை தொற்றுஅறிகுறிகளை மோசமாக்கும் திறன் கொண்டவை.
- வலி மற்றும் அசௌகரியத்தை எளிதாக்க அடிவயிற்றின் அடிப்பகுதியில் வெப்பமூட்டும் பட்டைகளைப் பயன்படுத்துதல்.
4. சிறுநீர் பாதை தொற்று இருந்தால் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? (What foods should be avoided with UTI?)
சிறுநீர் பாதை தொற்றுகளை நேரடியாக ஏற்படுத்தும் அல்லது குணப்படுத்தும் குறிப்பிட்ட உணவுகள் எதுவும் இல்லை என்றாலும், காஃபின், ஆல்கஹால், காரமான உணவுகள் மற்றும் செயற்கை இனிப்பூட்டிகள் போன்ற சில உணவுகள் மற்றும் பானங்கள் சிறுநீர்ப்பையை எரிச்சலடைய செய்யலாம் அல்லது சிலருக்கு சிறுநீர் பாதை தொற்று அறிகுறிகளை மேலும் மோசமாக்கலாம். உங்கள் சொந்த உடலை நன்றாக கவனித்து, உங்கள் அறிகுறிகளை மோசமாக்கும் உணவுகளைத் தவிர்ப்பது சிறந்தது.