அடிக்கடி சிறுநீர் கழித்தல் - ஒரு சுருக்கமான கண்ணோட்டம் / Frequent Urination - A Brief Overview
அடிக்கடி சிறுநீர் கழிப்பது என்பது திடீரென சிறுநீர் கழிப்பது மற்றும் தீவிரமான உந்துதலோடு தன்னிச்சையாக சிறுநீர் கழிப்பது என வகைப்படுத்தப்படுகிறது. ஒரு நாள் அதாவது 24 மணி நேரத்தில் நீங்கள் 2-3 லிட்டர் தண்ணீரை அருந்தினால் 7-10 முறைக்கு மேல் சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்.
சிறுநீர் கழித்தல் என்பது சிறுநீரகத்தில் சிறுநீர் உருவாகி, சிறுநீர்ப்பையில் அது சேமிக்கப்பட்டு, பின்னர் உடலில் இருந்து வெளியேற்றப்படும் முழு செயல்முறை நிகழ்வையும் குறிக்கிறது. லத்தீன் மொழியில் மிக்ச்சரிஷன் என்பது 'சிறுநீர் கழிப்பதற்கான நிலையான உந்துதலைக் கொண்டிருப்பது' என்று பொருள்படும். உடலில் இருந்து சிறுநீரை வெளியேற்றும் செயல் முறையை இது குறிக்கிறது. அடிக்கடி சிறுநீர்கழிப்பு நிகழ்வால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு பொதுவாக இந்த சிறுநீர் கழித்தல் செயல்முறை பிரச்சனையை உண்டாக்குகிறது.
பெரும்பாலான மனிதர்களுக்கு வெவ்வேறு வகையான சிறுநீர் சுழற்சிகள் இருப்பது என்பது இயல்பான ஒன்றுதான். பெரும்பாலான மக்களின் சிறுநீர் சுழற்சிகள் 24 மணி நேரத்தில் 4-10 முறைகள் வரை இருக்கும். அது அந்தந்த நபர்களின் உணவு முறை, அவர் உட்கொள்ளும் திரவ உணவின் அளவு, அவரின் வாழ்க்கை முறை மரபியல் மற்றும் வானிலை சுற்றுச்சூழல் மேலும் புகை பிடிப்பவர் மற்றும் குடிப்பவர் என்றால் அதற்கு ஏற்றார் போல் மாறுபடும்.
குளிர்காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது என்பது பொதுவான காரணிகளில் ஒன்று. ஏனெனில் குளிர்காலத்தில் நம் வியர்வையின் மூலமாக தண்ணீரை அதிக அளவு இழக்க முடியாது. இதன் விளைவாக சிறுநீர் பையில் அதிக சிறுநீர் சேருவதால் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான அவசியம் ஏற்படுகிறது.
இது தவிர சிறுநீரகத்தில் (சிறுநீர்ப்பை அல்லது தசைகள் மற்றும் ஸ்பைன்க்டர் போன்றவை) ஏற்படும் பிரச்சனைகள், நாம் உட்கொள்ளும் மருந்துகள், மாதவிடாய், கர்ப்பம், காயங்கள், அறுவை சிகிச்சைகள் அல்லது புற்றுநோய் இவற்றின் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிப்பது என்பது இருக்கலாம்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பதை நிறுத்துவது என்பது அதற்கான காரணங்களை பொறுத்தது.
அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு எது வழிவகுக்கிறது / What Leads to Frequent Urination?
அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான பொதுவான காரணங்கள் பின்வருமாறு:
- அதிகப்படியான திரவ உட்கொள்ளல், குறிப்பாக சில விளையாட்டு வீரர்களிடம் இது அதிகமாக உள்ளது
- அதிகமாக காபி அல்லது மது அருந்துதல்
- புகைபிடித்தல்
- இரு வகையான நீரிழிவு நோய்
- கர்ப்பம் - இது சிறுநீர்ப்பையில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் சிறுநீரை வெளியேற்றும்
- புரோஸ்டேட் பிரச்சினைகள்
- கவலை
- இரத்த அழுத்த மருந்துகள்
- சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுகள்
- பிறப்புறுப்பு தொற்றுகள்
- மாதவிடாய்.
புற்று நோய்கள், அறியப்படாத கட்டிகள், அடிவயிற்றின் கீழ் பகுதியில் ஏற்படும் கதிர்வீச்சு, நரம்பு மண்டல கோளாறுகள் அல்லது சிறுநீர் பாதையில் ஏற்படும் சேதம் ஆகியன இதற்கான மற்ற காரணங்கள் ஆகும்.
வயது மூப்பு அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான மற்றொரு பொதுவான காரணம். சிறுநீர்ப்பை திறப்பதற்கும் மூடுவதற்கும் காரணமான தசைகள், அதேபோல் இடுப்பு பகுதியை தாங்கும் தசைகள் ஆகியவை வயதாகும் போது சுருங்கி வலியை ஏற்படுத்தலாம். இதனால் சிறுநீர்ப்பை அமைப்பு தோல்வி அடையும் வாய்ப்பு ஏற்படும். வயதானால் ADH அல்லது ன்டிடியூரிடிக் ஹார்மோன் உற்பத்தி குறைகிறது, இது இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதை அதகிகரிக்கிறது.
அடிக்கடி சிறுநீர் கழிப்பதன் அறிகுறிகள் / Symptoms of Frequent Urination
ஒருவர் கழிவறைக்கு செல்லும் வழக்கமான நேரங்களுக்கு இடையே குறுகிய கால இடைவெளியில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தால் மற்றும் சிறுநீர் கழிக்க வேண்டிய அவசரம் அதிகரித்ததாகத் தோன்றினால் அவர் சிறுநீர் கழிப்பு சிக்கலை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.
சாதாரண சிறுநீர் சுழற்சியைக் கொண்ட ஒரு நபர் சிறுநீர் கழிக்கும் தருணத்திற்கு முன்பே போதுமான எச்சரிக்கையுடன் இருப்பார், மேலும் கழிப்பறையைப் பயன்படுத்துவதற்கு முன்பு சில நிமிடங்கள் காத்திருப்பது கடினமாக விஷயமாக அவருக்கு இருக்காது. மேலும், ஒரு நபர் ஒவ்வொரு நாளும் 2-4 லிட்டர் தண்ணீரைக் குடிக்கிறார் என்றால், அவரின் சிறுநீர் வருகைக்கு இடையில் குறைந்தது 2 மணிநேரம் அவசியம் இருக்க வேண்டும்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான அறிகுறிகள் பின்வருமாறு:
- ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒருமுறை சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும்
- சிறுநீர் கழிப்பதற்கான திடீர் கட்டுப்பாடற்ற தூண்டுதல், அதைத் தொடர்ந்து மிகக் குறைந்த அளவு சிறுநீர் மட்டுமே வெளியேறும்
- சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டை இழப்பது அதாவது குறிப்பாக இரவு படுக்கை நனைவதற்கு இது வழிவகுக்கிறது
- சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல் உணர்வு ஏற்படும்
- சிறுநீரின் அசாதாரண நிறம்
- சிறுநீர் கழிப்பதில் சிரமம்
- நாள் முழுவதும் அடிக்கடி அல்லது தொடர்ந்து சிறுநீர் வெளியேறுதல்
அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் ஆபத்து காரணிகள் மற்றும் சிக்கல்கள் / Risk Factors and Complications of Frequent Urination
அடிக்கடி சிறுநீர் கழிப்பதைக் கண்டுபிடித்து சரிசெய்யத் தவறினால் கடுமையான சிக்கல்கள் ஏற்படலாம். நீரிழிவு மற்றும் சிறுநீரக தொற்று போன்ற மிகவும் பொதுவான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் ஏற்படும். அடிக்கடி சிறுநீர் கழித்து, சிகிச்சை அளிக்கப்படாமல் விடப்பட்டால் பின்வரும் சில ஆபத்துக் காரணிகள் மற்றும் பின்விளைவுகள் ஏற்படும்:
- கருவுறாமை
- நீரிழிவு கோமா
- புற்றுநோய் பரவுதல்
- சிறுநீரக செயலிழப்பு
- கீட்டோஅசிடோசிஸ்
- அதிர்ச்சி
- இரத்த தொற்று
அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் ஏற்படும் விளைவுகள் / The Effects of Frequent Urination on Overall Health
சிறுநீர் என்பது களங்கம் நிறைந்த ஒன்றாக தான் உள்ளது. சிறுநீர் பொதுவாக தூய்மையாற்றதாக கருதப்படுகிறது. மேலும் ஒருவருடைய சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டை இழக்கிறது என்றால் அது "பொருத்தமற்ற ஒன்று" அல்லது குழந்தைத்தனமாக தான் மற்றவர்களால் கருதப்படுகிறது. சிறுநீர் கழிக்கும் பலர் தங்கள் அறிகுறிகளை பொருட்படுத்தாமல் அல்லது சிகிச்சை அளிக்காமல் பல நாட்களாக அப்படியே சென்று கொண்டிருக்கின்றனர். இதை ஒரு பெரிய பிரச்சினையாக கூட அவர்கள் நினைப்பதில்லை.
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை ஏற்பட்டவர்களின் வாழ்க்கையில் அது நீண்ட கால விளைவை ஏற்படுத்தும். இது அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கெடுக்கும். பின்வருபவை சில மோசமான பக்க விளைவுகள்:
- தனிமைப்படுத்திக்கொள்ளுதல்: தங்கள் நெருங்கிய குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கூட தங்கள் பிரச்சினைகளைப் பற்றி பேச முடியாமல், பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்திலிருந்து விலகி தனியாக வாழ்கின்றனர்.
- இவர்கள் பொதுவாக வீட்டிலேயே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்: இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வேலைக்குச் செல்வதையோ, விருந்துகளுக்குச் செல்வதையோ அல்லது கழிப்பறை உடனடியாகக் கிடைக்காத வேறு எங்கும் செல்வதையோ தவிர்க்கிறார்கள். இது மேலும் பிரச்னையை அதிகப்படுத்த வழிவகுக்கிறது.
- விழுந்துவிடுவோம் என்ற பயம்: முதியோர்கள் இரவில் கழிப்பறைக்கு செல்லும் வழியில் கீழே விழுந்து முதுகுத்தண்டு/இடுப்பு காயங்கள் மற்றும் மரணம் கூட ஏற்படலாம்.
- தண்ணீர் அருந்துவதை குறைப்பது: சிறுநீரகப் பிரச்சினைகள்/கற்கள் ஏற்பட்டவுடன் கழிவறைக்குச் செல்வதை குறைக்க, பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நீர் உட்கொள்ளலைக் குறைப்பதால் ஏற்படும் பொதுவான விளைவுகளில் இதுவும் ஒன்றாகும்.
- அவமானம்: கழிவறைக்குச் செல்ல வேண்டியுள்ளது என்பதை நினைத்து அவமானம், மீண்டும் மீண்டும், படுக்கையை நனைத்தல் அல்லது குடும்பத்தின் உதவியை எதிர்பார்த்தல் ஆகியவை பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் மன ஆரோக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதன் விளைவாக, மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தோன்றினால் கூட, உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அடிக்கடி சிறுநீர் கழிப்பதை நிறுத்துவது மற்றும் காய்ச்சல், கடுமையான பசி மற்றும் தாகம், வயிற்று எடிமா, திடீர் எடை இழப்பு அல்லது அதிகரிப்பு மற்றும் பிறப்புறுப்பு அல்லது ஆண்குறி வெளியேற்றம் உள்ளிட்ட மேம்பட்ட அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி என்பதைப் புரிந்துகொள்ள மருத்துவர் நோயாளிகளுக்கு வழிகாட்டுவார்
Product Recommendations
பிரெண்ட்ஸ் டயப்பர் எப்படி நமக்கு உதவுகிறது / How Can Friends Adult Diapers Help?
பிரெண்ட்ஸ் டயப்பர்கள் மற்றும் உலர் பேன்ட்கள் / ட்ரை பேன்ட்ஸ் பயனர்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதை எதிர்த்துப் போராட உதவும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை மிகவும் சிறுநீரை உறிஞ்சக்கூடியவை, மிக மென்மையானவை மற்றும் வசதியானவை, மேலும் பயன்படுத்துவதற்கும் அப்புறப்படுத்துவதற்கும் எளிதானது, இதனால் சிறுநீர் கசிவை எளிதாகவும் திறமையாகவும் கையாள முடியும். பிரெண்ட்ஸ் டயப்பர்களுக்கு கற்றாழை-பூசப்பட்டு தயாரிக்கப்படுகிறது, மேலும் அவை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன, இது பயனரின் சருமத்தை வறட்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
எங்கள் உலர் பேன்ட்களும் உள்ளாடைகளைப் போலவே இருக்கின்றன, மேலும் பல பயனர்கள் தங்கள் வழக்கமான வாழ்க்கையைத் தொடர இவை பயன்படுகின்றன, மேலும் அவர்கள் முன்பு செய்ததைப் போலவே அனைத்து வேலை, சமூகமயமாக்கல் மற்றும் அவர்கள் விரும்பும் அனைத்தையும் தொடர முடிகிறது. அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்கள் இயல்பாக நன்றாக வாழ டயப்பர்களை உபயோகிக்கலாம். மற்றவர்கள் இன்றே தேர்வு செய்ய உதவுங்கள்! :)